கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தின் 27 ஆவது மாடியில் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது தெற்காசியாவின் முதலாவது சுழலும் உணவகம்.
கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாக நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கமைய, தாமரை கோபுரத்தின் மூன்று தளங்களை நிர்வகிப்பதற்கான அனுமதியை தனியார் நிறுவனமொன்று பெற்றுள்ளது.
குறித்த நிறுவனம் தாமரை கோபுரத்தின் 26 ஆவது மாடியில் இரண்டு விருந்துபசார அரங்குகளை நிர்வகிக்கவுள்ளதுடன், 25 ஆவது மாடியை வேறு சில பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பயன்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுழலும் உணவகத்தில் ஒரே தடவையில் 225 விருந்தினர்கள் தங்க முடியும் எனவும் சர்வதேச உணவுகளின் உண்மையான சுவைகளை வழங்குவதற்கு, வெளிநாட்டு சமையல் நிபுணர்களை பணியமர்த்தவுள்ளதாகவும் குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சுழலும் உணவகம் தினமும் நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇