மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான தொற்றா நோய் பரிசோதனை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இரா. முரளீஸ்வரனின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் 12.08.2025 அன்று மேற்கொள்ளப்பட்டன.

சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு Electrocardiogram (ECG), குருதிப்பரிசோதனை மற்றும் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் நோயாளர் கட்டில் ஒன்று சிறைச்சாலைக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தது.

இந்நிகழ்வில் தொற்றாநோய் பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் இ.உதயகுமார், உயிரியல் வைத்திய பொறியியலாளர் ரவிச்சந்திரன், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன், பிராந்தியத்துக்குரிய மருத்துவ சபை வைத்திய அதிகாரி வைத்தியர் மாதவன், சிறைச்சாலை வைத்தியர் J.K.H.P. பெரேரா மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects