நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று (12.08.2025) கூடியபோதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டது.
புதிய பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அவரது பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த வாரம் கூடிய அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










