இந்திய கடலோரக் காவல்படைக்கும் இலங்கை கடலோரக் காவல்படைக்கும் இடையிலான 8ஆவது உயர்மட்டக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் ரியர் அட்மிரல் வை.ஆர்.சேரசிங்க மற்றும் இந்திய கடலோரக் காவல்படையில் பணிப்பாளர் பரமேஷ் சிவமணி ஆகியோரின் தலைமையில் இக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த கடல்சார் கூட்டாண்மை தொடர்பில் இந்தச் சந்திப்பின் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், கடல் பாதுகாப்பு மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைத் தொடர்ச்சியாக உறுதி செய்வதற்கு இரு தரப்பும் இதன்போது இணங்கியுள்ளன.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










