கொழும்பு தேசிய அருங்காட்சியகம் உட்பட நாட்டில் உள்ள ஏனைய பிராந்திய அருங்காட்சியகங்கள் செப்டம்பர் முதலாம் திகதி முதல் வாரத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மூடப்படும் என தேசிய அருங்காட்சியகங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த அருங்காட்சியகங்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுதந்திர தினம், தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு, தொழிலாளர் தினம் போன்ற விசேட விடுமுறை தினங்களில் அருங்காட்சியகங்கள் மூடப்படும்.
ஏனைய அனைத்து நாட்களிலும், காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, அனைத்து அருங்காட்சியகங்களும் பொது மக்களின் பார்வைக்காக திறந்திருக்குமெனவும், தேசிய அருங்காட்சியகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










