புகையிரத திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட ரவீந்திர பத்மபிரிய 13.08.2025 அன்று தனது கடமைகளை ஆரம்பித்தார்.
இவர் இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரியாகவும், இதற்கு முன்னர் நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.
புகையிரத பொது முகாமையாளராக பணியாற்றி வந்த தம்மிக்க ஜயசுந்தரவை அப் பதவியிலிருந்து நீக்க சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கமைய, அவர் இலங்கை பொறியியல் சேவையின் விசேட தரத்தில் பொருத்தமான பதவிக்கு நியமிக்கப்பட உள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










