பணம் அச்சிடுவது தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பணம் அச்சிடுவது நாட்டில் பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுக்காது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந் நிலையில், தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப நாணயத்தாள் அச்சிடுதல் மேற்கொள்ளப்படுகிறது.

இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் செயற்பாடாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடும்போது, வருமானம் மற்றும் செலவுகளுக்கு இடையிலான இடைவெளி, 33க்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்தோடு கடந்த ஆண்டின் முதல் பாதியில், அரச வருமானம் 1.8 டிரில்லியன் ரூபாய்களாக இருந்தது, அது இந்த ஆண்டு 2.3 டிரில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளது.

இது 24.7வீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், செலவும் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects