தமிழ் மருத்துவ நிபுணர் சங்கம் லண்டன் மற்றும் அம்கோர் அமைப்புகளின் நிதியுதவியின் கீழ் கிழக்குப் பிராந்திய கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் தொழிற்பயிற்சி பிரிவினால் நடாத்தப்பட்ட பயிற்சியினை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிழக்கு பிராந்திய கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமாகிய தயாளசீலன் மயூரன் தலைமையில் 09.02.2024 அன்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் இடமபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் மருத்துவ நிபுணர் சங்கம் லண்டன் அமைப்பின் பிரதிநிதி சிரேஷ்ட வைத்தியர் திருமதி காந்தா நிரஞ்சன் மற்றும் அம்கோர் நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமாகிய திரு.பரமசிவம் முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டதுடன், கௌரவ அதிதியாக குடும்ப நல மருத்துவர் வைத்தியர் திரு நடராஜா நிரஞ்சன் (லண்டன்) மேலும் சிறப்பு அதிதிகளாக அம்கோர் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சி முகாமையாளர் திரு.யோகநாதன் சிவயோகராஜன், சாகி சர்வதேச நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.குணசேகரம் சுலக்சன், அம்கோர் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் திரு.ஜெயபிரதாப், அம்கோர் நிறுவனத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் திரு.சகிரன் மற்றும் அம்பாறை மாவட்ட விபுலானந்தர் புணர்வாழ்வு அமைப்பின் முகாமையாளர் திரு.காளிக்குட்டி சந்திரலிங்கம் அத்துடன் கிழக்குப் பிராந்திய கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் போதனாசிரியர்கள், நிறுவன உத்தியோகத்தர்கள், பயிற்சிகளை மேற்கொள்ளும் மற்றும் பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்கள் போன்றோர் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் பிரதான அம்சமாக உதவித்தாதியர், பராமரிப்பாளர், கையடக்க தொலைபேசி திருத்துனர், கேக் வடிவமைப்பாளர் மற்றும் ஆரி வடிவமைப்பு போன்ற பயிற்சி நெறிகளை கடந்த 2023ஆம் ஆண்டு காலப் பகுதியில் பயிற்சியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
மேலும் கிழக்கு பிராந்திய கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் தொழிற் பயிற்சி பிரிவினை மேம்படுத்தும் நோக்குடன் தமிழ் மருத்துவ நிபுணர் சங்கம் லண்டன் நிறுவனத்தினால் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 12 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் தொழிற்பயிற்சி வழங்கும் சேவையினை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇