மட்டக்களப்பில் சுய தொழிலில் ஈடுபடும் தேவைப்பாடுடைய முயற்சியாளர்களுக்கு 30 மில்லியன் பெறுமதியான சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் வேண்டுகோளிற்கு இணங்க Qatar charity நிறுவனத்தினால் சுய தொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்கள் 17.09.2025 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
அரச சார்பற்ற நிறுவனங்களிற்கான மாவட்ட இணைப்பாளர் யூ.எஸ்.றிஸ்வியின் ஒழுங்கமைப்பில் நடாத்தப்பட்ட நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் கலந்து கொண்டு சுய தொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார்.
சுய தொழில் முயற்சியாளர்களின் தேவைக்கு ஏற்ப தையல் இயந்திரங்கள், தானியங்கள் அரைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட மேலும் பல பெறுமதிவாய்ந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் Qatar charity அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் தாரிக் மன்சூர் மற்றும் அமைப்பின் திட்ட உத்தியோகத்தர் பைசல் பரீட், சுய தொழில் முயற்சியாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










