தபால் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடரும் என அறிவித்துள்ளன.
19 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் தொழிற்சங்கங்கள் 17.08.2025 அன்று முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உடனடியாக அமைச்சருடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் இ.ஜி.சி.நிரோஷன் கூறியுள்ளார்.
அத்துடன், குறித்த கலந்துரையாடலுக்குப் பின்னர், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவர தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










