பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு ஒரு வார காலத்திற்காக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை 60 லீட்டர் முதல் 360 லீட்டர் வரையிலான வரம்பிற்குள் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
அதன் பிரகாரம், பேருந்துகள் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் அவற்றுக்கான எரிபொருள் அளவு தீர்மானிக்கப்படும்.
இந்த நடைமுறை முறைப்படுத்தப்படும் வரை, பேருந்துகளுக்குத் தேவையான எரிபொருளை இலங்கை போக்குவரத்துச் சபையிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










