உள்ளூராட்சி மன்றங்களின் செயற்திறனை மதிப்பீடு செய்து தரப்படுத்தலுக்கான விசேட குழு ஏறாவூர் நகர சபைக்கு 06 .11. 2023 அன்று விஜயம் செய்து அதன் செயல்பாடுகளைப் பார்வையிட்டனர்.
இவ்விஜயத்தில் திருகோணமலை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் பரமேஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள் இக்குழுவில் கலந்துகொண்டனர்.
ஏறாவூர் நகர சபை செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தலைமையில் நகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மதிப்பீட்டு குழுவினருக்கு சபையின் செயற்பாடுகள் தொடர்பாகத் தெளிவுபடுத்தினர்.
இதன்போது சபையின் நிருவாக நடவடிக்கைகள் மற்றும் பொது மக்களுக்கான சேவைகள் திருப்திகரமாக இடம்பெறுவதாக மதிப்பீட்டு குழுவினர் நம்பிக்கை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇