சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர வதிவிட அழைப்பு விடுத்துள்ள கனடா!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மருத்துவ மற்றும் சமூக சேவைத் துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 3,500 பேருக்கு நிரந்தர வதிவிட (Permanent Residency) அழைப்புகளைக் கனடா வழங்கியுள்ளது.

சமீப காலமாக கனடாவில், மருத்துவ மற்றும் சமூக சேவைத் துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை அடிப்படையாக வைத்து இந்த வதிவிட அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த அழைப்புகள் 14.11 .2025 அன்று எக்ஸ் ப்ரஸ் என்ட்ரி முறையின் கீழ் வெளியிடப்பட்டன.

இதனால், வெளிநாடுகளில் உள்ள மருத்துவ மற்றும் சமூக சேவை நிபுணர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், மருத்துவமனைகள், அவசர சிகிச்சை, நீண்டகால பராமரிப்பு, மனநல ஆதரவு, சமூக சேவைகள் போன்ற துறைகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது.

இதனை நிவர்த்தி செய்யும் முகமாக அனுபவமுள்ள நிபுணர்களை விரைவாக இணைத்துக்கொள்ளும் நோக்கில் இந்த அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

இந்த பிரிவில் தகுதி பெற விண்ணப்பதாரர்கள் ,

கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது 6 மாதங்கள் தொடர்ச்சியாக முழுநேரம் பணியாற்றியிருக்க வேண்டும்.

குறைந்தது ஒரு வருட திறமையான வேலை அனுபவம்.

சுகாதார மற்றும் சமூக சேவை தொடர்பான 37 தொழில்களில் ஏதேனும் ஒன்றில் அனுபவம் இருக்க வேண்டும்.

தகுதி பெற்றவர்கள் 60 நாட்களுக்குள் முழுமையான நிரந்தர வதிவிட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இதில் அடையாள ஆவணங்கள், காவல்துறை சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை, கல்வி மதிப்பீடு, வேலை அனுபவ சான்றுகள் ஆகியவை அடங்கும்.

கனடா அரசின் இந்த நடவடிக்கை, நாட்டின் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதோடு, உலகளாவிய நிபுணர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects