கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 198,235 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இலங்கை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இது 20.4 சதவீத அதிகரிப்பாகும் என அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவிலிருந்து 46,473 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
கடந்த மாதத்தில் பிரித்தானியாவில் இருந்து 19,764 பேரும், ஜேர்மனியிலிருந்து 12,500 பேரும், சீனாவிலிருந்து 12,294 பேரும், பிரான்சிலிருந்து 10,495 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் 31 வரையான காலப்பகுதியில் 1,566,523 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










