எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் கடமைக்கு சமூகமளிப்பதற்கான நியமனக் கடிதங்களைப் பெறும் அனைத்து அதிகாரிகளும் உரிய தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் கடமைகளுக்கு நியமனக் கடிதங்களைப் பெற்ற அதிகாரிகள் சமூகமளிக்காத பட்சத்தில் அவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்
தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்காத அலுவலர்கள், அரசியலமைப்பு ரீதியாக, தேர்தல் ஆணைக்குழுவுடன் நியாயமான காரணமின்றி ஒத்துழைப்பதற்கு மறுக்கின்ற அல்லது தவறுகின்ற நபர்களாகக் கருதப்படுவர்.
இவ்வாறான செயற்பாடுகள், ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடிய ஒரு குற்றமாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇