விவசாய நிலங்களுக்கான ஏக்கர் வரி அறவீட்டை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் 12.12.2023 அன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய நிலங்களுக்காக, ஒரு ஏக்கருக்கு நூறு ரூபாய் வீதம், இந்த ஏக்கர் வரி வசூலிக்கப்படுறது.
இந்த வரியினால் ஈட்டப்படும் வருமானத்தை விட, அதனை வசூலிப்பதற்காக அதிக தொகை செலவிடப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇