யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள தொழிற் சந்தை தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள தொழிற் சந்தை தொடர்பாக மனிதளவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் 10.09.2025 அன்று மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் எதிர்வரும் 22 ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள தொழிற் சந்தை தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், ஒழுங்கமைப்புக்கள், தொழிலற்றோருக்கான அறிவித்தல்கள் அவர்களை தொழிற் சந்தைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் போன்றவை தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மனிதளவள அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் க.கருணாகரன், மாவட்ட பிரதேச மனிதளவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி திட்ட முகாமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects