ஜனாதிபதியினால் 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை 03.09.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கினார்.

விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவரும் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது அரசியலமைப்பின் (2) ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியினால் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல் முந்தைய பதவிகள்

01. திரு. எஸ்.எஸ்.கே. விதான மாவட்ட நீதிபதி

02. திரு. ஏ.எம்.ஐ.எஸ். அத்தநாயக்க மாவட்ட நீதிபதி

03. திரு. ஏ.எம்.எம். ரியால் மாவட்ட நீதிபதி

04. திரு. டீ.பீ. முதுங்கொடுவ, மாவட்ட நீதிபதி

05. திரு. எஸ்.பி.எச்.எம்.எஸ். ஹேரத் மேலதிக மாவட்ட நீதிபதி

06. திரு. ஜே. கஜனிதீபாலன் மாவட்ட நீதிபதி

07. திரு. டி.எம்.டி.சி. பண்டார நீதிச் சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்

08. திரு. எச்.எம்.பி.ஆர். விஜேரத்ன மேலதிக மாவட்ட நீதிபதி

09. திரு. டி.எம்.ஏ. செனவிரத்ன மேலதிக மாவட்ட நீதிபதி

10. திரு. ஏ.ஏ. ஆனந்தராஜா நீதவான்

11. திரு. ஜி.என். பெரேரா மாவட்ட நீதிபதி

12. திரு. ஏ. ஜுடேசன் மாவட்ட நீதிபதி

13. திருமதி.டபிள்யூ.கே.டி.எஸ். வீரதுங்க மாவட்ட நீதிபதி

14. திரு.ஆர்.பி.எம்.டி.ஆர். வெலிகொடபிடிய மாவட்ட நீதிபதி

15. செல்வி கே.டி.என்.வி. லங்காபுர, நீதவான்

16. திரு. டி.எம்.ஆர்.டி. திசாநாயக்க மாவட்ட நீதிபதி

17. திரு. எம்.ஐ.எம். ரிஸ்வி மாவட்ட நீதிபதி

18. திருமதி. ஏ. ஜெயலக்ஷி டி சில்வா சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects