மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான வெற்றிடங்கள் குறித்து வெளியான அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையின் மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61, 835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

அவற்றில் அதிகபட்சமாக 16,651 வெற்றிடங்கள் மேல் மாகாண சபையில் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வெற்றிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு முயற்சிகள் நடந்து வருவதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

நாடு தழுவிய சேவைகளுக்கு 1,000 பல்கலைக்கழக பட்டதாரிகள் ஏற்கனவே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 1,000 பேரை பணியமர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரச துறையை வலுப்படுத்தும் ஒரு பரந்த நடவடிக்கையாக, 35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects