NSBM பசுமைப் பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைந்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறை (NIRDC), இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA),தேசிய தொழில் முயற்சி அதிகார சபை (NEDA) மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) NSBM ஏற்பாடு செய்த “Colombo Robotics Meetup 2025” நிகழ்ச்சி, 12.09.2025 அன்று NSBM பசுமை பல்கலைக்கழக வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலண்டன் இம்பீரியல் கல்லூரியின் (Imperial College London) Morph Lab பணிப்பாளர் பேராசிரியர் த்ரிஷாந்த நாணாயக்கார, NIRDC பணிப்பாளர் நாயகம் கலாநிதி முதித டி. செனரத் யாப்பா மற்றும் NSBM பசுமைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் சமிந்த ரத்நாயக்க உள்ளிட்ட கல்வித்துறை, தொழில்துறை மற்றும் அரச துறையினர் பலரும் கலந்துகொண்டனர்.
விவசாயத் துறைக்கு ரோபோ தொழிநுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அதனுடன் தொடர்புடைய நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதையும், சிறிய மற்றும் மத்திய தர தொழில்முனைவோரை அதற்காக ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொழில்முனைவோர், மாணவர்கள், புத்தாக்கத்தில் ஈடுபடுவோர் என 200 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
NIRDC பணிப்பாளர் நாயகம் கலாநிதி முதித டி. செனரத் யாப்பா இங்கு NIRDC தொடர்பில் அறிமுகத்தை வழங்கியதுடன், இலங்கையில் விவசாயத் துறையின் செயல்திறனுக்காக புதிய தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், அது குறித்த ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதன் மூலம் உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் நோக்கை, எவ்வாறு துரிதப்படுத்த முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நவீன விவசாய தொழில்நுட்பம் குறித்த பல முன்வைப்புகள் இங்கு நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.











இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










