5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான விடைத்தாள் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், எதிர்வரும் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரையில் பரீட்சார்த்திகள் தமது மேன்முறையீட்டை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்நிலை முறையில் குறித்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
![](https://mathaku.com/wp-content/uploads/2023/11/1-19.jpg)
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇