லெப்டோஸ்பிரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை…
இன்றைய சூழலில் எம்மில் பலரும் வாரந்தோறும் தங்களுடைய மன இறுக்கம் – மன அழுத்தம் – மன உளைச்சல் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக பயணங்களை மேற்கொள்வார்கள். குறிப்பாக நீர்வீழ்ச்சி, படகு சவாரி போன்ற நீர் நிலைகளில் சாகச பயணம் மேற்கொள்வதுண்டு.
சிலருக்கு இத்தகைய திடீர் பயணங்களால் மனம் உற்சாகமடைந்தாலும் அசுத்தமான காற்று மற்றும் நீரால் பாக்டீரியா தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும். இதனை மருத்துவ மொழியில் லெப்டோஸ்பிரோசிஸ் என குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பாதிப்பிற்கு தற்போது முழுமையான நிவாரண சிகிச்சை கிடைப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
நீர்வீழ்ச்சி, குளம், ஏரி, கடல் போன்ற நீர் நிலைகளில் சாகச விளையாட்டு மேற்கொள்ளும் போதோ அல்லது எதிர்பாராமல் ஏற்படும் வெள்ளம், கனமழை போன்ற தருணங்களில் மழையில் நனையும் போது உங்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்க்குறி பாதிப்பு ஏற்படும்.
செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளின் சிறுநீர் மூலமாகவோ அல்லது வெள்ளம், கன மழை போன்ற தருணங்களில் ஏற்படும் மண் மாசின் காரணமாகவோ அதில் மக்கள் நடக்கும் போது லெப்டோஸ்பிரோ எனும் பாக்டீரியாவால் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இது பொதுவாக விலங்குகளிடமிருந்து மக்களுக்கு மூக்கு, வாய், கண், தோல் மூலம் பரவுகிறது.
சிலர் பயணம் மேற்கொள்ளும்போது பொது இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட அல்லது மாசடைந்த உணவு அல்லது நீரை அருந்துவதால் இத்தகைய தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய பருவ கால பாதிப்புகளால் உலகம் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், குறிப்பாக லெப்டோஸ்பிரோசிஸ் எனும் இத்தகைய பாதிப்பால் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மரணமடைகிறார்கள் என்றும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இத்தகைய பாக்டீரியா தொற்று பாதிப்பின் காரணமாக அதிக காய்ச்சல், கண் சிவத்தல், தலைவலி, குளிர் காய்ச்சல், தசை வலி, வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சொறி, நெஞ்சு வலி, சுவாசிப்பதில் சிரமம், தோலில் நிற மாற்றம் போன்ற பல்வேறு அறிகுறிகள் ஏற்படக்கூடும்.
இத்தகைய பாதிப்பினை பிரத்யேக பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொண்டு, அதற்கேற்ற வகையில் பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.
வைத்தியர் சுரேந்திரன்


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










