மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 324 மில்லியன் ருபாய் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட இருதய சிகிச்சைப் பிரிவின் முதல் கட்ட திறப்பு விழா நிகழ்வானது சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோரது பங்குபற்றுதலுடன் 18.09.2025 அன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இருதய சிகிச்சைப் பிரிவு கட்டிடமானது 05 தளங்களைக் கொண்டுள்ளதுடன், 4,328 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டதுடன் கட்டிடத்தின் தரை தளத்தில், எக்ஸ்-ரே மற்றும் ஈசிஜி சோதனை அலகுகள் உள்ளன, முதல் தளத்தில் ஒரு கேத் லேப் மற்றும் ஒரு கரோனரி கேர் யூனிட் (CCU) உள்ளன. இரண்டாவது மாடியில் அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் ஒரு அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (SICU) உள்ளன, மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகளில் 80 படுக்கைகள் கொண்ட விடுதிகள் உள்ளன.
மத்திய பொறியியல் ஆலோசனை பணியகம் (CECB) இத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடர்பான ஆலோசனை சேவைகளை வழங்குகிறது.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நவீன மயப்படுத்தப்பட்ட இருதய சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளதுடன் மூன்று மாத காலத்தில் புதிய MRI பிரிவு, வைத்தியசாலைக்கு அவசியமான புதிய கட்டடத் தொகுதியை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதுடன் எதிர்காலத்தில் மேலும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்வதற்கு தேவையான நிதியை வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பித்து நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலாரஞ்சினி கணேசலிங்கம், வைத்திய நிபுணர்கள், உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










