மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பிளான்டர் ஃபாசிடிஸ் எனும் கால் வலி பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை……..

சிலருக்கு காலையில் எழுந்தவுடன் பாதத்தின் அடிப்பகுதியில் ஒரு வகையினதான வலி ஏற்படும். அதன் பிறகு அந்த வலி அதிகரிக்கும். இத்தகைய கால் வலி பாதிப்பிற்கு மருத்துவ மொழியில் பிளான்டர் ஃபாசிடிஸ் என குறிப்பிடப்பட்டு, அதற்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிகிச்சை வழங்கப்பட்டு முழுமையான நிவாரணம் அளிக்கப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் பாதத்தின் அடிப்பகுதியில் வலி ஏற்படுவது நீண்ட நேரம் நிற்பதன் காரணமாகவும், உட்கார்ந்த பிறகு எழும் போதும் குதிகால் பகுதியில் வலி ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சியின் போது இது தொடர்பான எந்த அறிகுறியையும் சிலர் உணராமல் இருக்கலாம். ஆனால் அதன்பிறகு பாதத்தில் அடிப்பகுதியில் வலியை உணரலாம்.

குதிகால் எலும்பு பகுதிக்கும் , கால் விரல்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் பகுதியில் இருக்கும் திசுக்களில் வீக்கம் ஏற்படுவதால் இத்தகைய பாதிப்பு உண்டாகிறது. பொதுவாக இத்தகைய பாதிப்பு முப்பது வயதிற்கு மேல் அறுபது வயதிற்குள் இருக்கும் நபர்களை பாதிக்கிறது.

பொதுவாக உங்களுடைய பாத அமைப்பிற்கு பொருந்தாத காலணியை பாவிக்கும் போதும், திடீரென்று குறிப்பிட்ட தொலைவை கடப்பதற்காக கால்களை உயர்த்தி தாண்டும் போதும் இத்தகைய பாதிப்பு தூண்டப்படுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

எக்ஸ்ரே மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து அதற்குரிய பிரத்யேக சிகிச்சையை வைத்தியர்கள் வழங்குவர். தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் கண்டறியப்பட்டிருக்கும் ஷாக் வேவ் தெரபி மற்றும் லேசர் தெரபி மூலம் இதற்கு முழுமையான நிவாரணம் அளிக்கப்படுகிறது.‌இதனுடன் இயன்முறை சிகிச்சையையும் வழங்கி வலியை குறைப்பர்.

வைத்தியர் ராஜ் கண்ணா

இச் செய்திaயினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects