வரவட்டை மற்றும் கடனட்டை மூலம் அறிவிடப்படும் மேலதிக கட்டணங்கள் இரத்து செய்ய நடவடிக்கை – டிஜிட்டல் பொருளாதார அமைச்சு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வரவட்டை மற்றும் கடனட்டை மூலம் பணம் செலுத்தும்போது, அறிவிடப்படும் மேலதிக கட்டணங்களை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் ஆகியவற்றுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அட்டை மூலம் பணம் செலுத்தும்போது நுகர்வோரால் ஏற்படும் இழப்புகளை அரசாங்கம் ஈடுசெய்யும் வழிகள் குறித்தும் இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், அனைத்து பரிவர்த்தனைகளையும் படிப்படியாக கையடக்க தொலைபேசி வழியாக QR குறியீடு அடிப்படையிலான கட்டணங்களுக்கு மாற்றுவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects