நியூசிலாந்து உயர் ஸ்தானிகர், சபாநாயகருக்கு இடையில் சந்திப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நியூசிலாந்தின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் டேவிட் கிரிகோரி பைன் மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை 23.09.2025 அன்று பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் நியூசிலாந்தின் பிரதி உயர் ஸ்தானிகர் கேப்ரியல் ஐசாக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இக் கலந்துரையாடலின்போது, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான வலுவான இருதரப்பு உறவுகளை எடுத்துரைத்ததுடன், எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

விவசாயம், சுற்றுலா, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். இலங்கையின் பால் பண்ணை தொழிலை மேலும் வலுப்படுத்துவதற்காக, திறன் விருத்தி (capacity building) மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் நியூசிலாந்தின் ஆதரவின் முக்கியத்துவத்தை சபாநாயகர் வலியுறுத்தினார்.

உயர் ஸ்தானிகர் டேவிட் கிரிகோரி பைன், ஊழலை ஒழிப்பதிலும் சட்டம் ஒழுங்கைப் பேணுவதிலும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை இதன்போது பாராட்டினார். அத்துடன், வர்த்தக ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை நிறுவுவதற்காக இலங்கையில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நியூசிலாந்து நாட்டவர்களிடையே இலங்கையை ஒரு சுற்றுலாத் தலமாக அறிமுகப்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் குறிப்பிட்டார். அத்துடன், தொழிற்பயிற்சி அபிவிருத்திக்குப் பங்களிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையேயான பாராளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் நியூசிலாந்து தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects