இந்தியாவில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய 2 தடகள வீரர்களான நுவான் இந்திக மற்றும் பிரதீப் சோமசிறி 02 வெண்கலப் பதக்கங்களை வென்று இன்று (07.10.2025) அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்கள் இன்று (07.10.2025) அதிகாலை 2.20 மணிக்கு இந்தியாவின் புது டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் AI-273 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
குறித்த போட்டி இந்தியாவின் புதுடெல்லியில் கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் இம் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இதில் உலகம் முழுவதும் 100 நாடுகளைச் சேர்ந்த 980 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
குறிப்பாக நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற நுவான் இந்திக, 6.46 மீட்டர் தூரம் கடந்து, வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
அத்தோடு, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற பிரதீப் சோமசிறி, வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
மேலும், 100 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்ற ஜனனி தனஞ்சனா, நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற புத்திக பிரனாந்து ஆகியோர் சிறப்பாக தமது திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.
குறித்த வீர,வீராங்கனைகளை வரவேற்க விளையாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவும், இலங்கை பராலிம்பிக் குழுவின் தலைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










