உலக உளநல தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்தவகையில் உளநலம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டிய தருணத்தில் இலங்கை இன்று அதைக் கொண்டாடுகிறது.
உளநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் உளநலத்தை ஆதரிப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, 1992 முதல் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
நாட்டில் 10 சதவீத மக்கள் பல்வேறு மனநோய்களால் பாதிக்கப்படுவதாகவும், அதில் 2% பேர் கடுமையான மனநோய்களால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சில நேரங்களில் சில தவறான எண்ணங்களாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் உளநல பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர்.
தற்போது , இளம் பருவத்தை எட்டுபவர்களில்சுமார் 18% பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலைமையைப் போக்க நாட்டின் சுகாதார அமைப்பு பல்வேறு தியாகங்களைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










