77,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 15,000 பில்லியன் மதிப்புள்ள திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட 35,000 பில்லியன் மதிப்புள்ள திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 364 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட 27,500 பில்லியன் மதிப்புள்ள திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










