மலையக புகையிரத பாதையில் இன்றும் (22.10.2025) புகையிரத போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி முதல் கொழும்பு கோட்டை, கண்டி மற்றும் பொல்கஹவெல இடையேயான 10 புகையிரத பயணங்கள் இன்று காலை இரத்து செய்யப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையக புகையிரத பாதையின் இருபுறமும் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் இன்று பிற்பகல் வரை புகையிரத பயணங்கள் மட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
கொழும்பு கோட்டை முதல் பதுளை இடையே இன்று காலை இயக்கப்படவிருந்த புகையிரத சேவை பேராதனை மற்றும் பதுளை இடையே மாத்திரம் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையகபுகையிரத பாதையில் புகையிரத சேவைகள் இன்று மதியம் 12.00 மணி முதல் வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










