இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டு ஒத்திவைத்த இலங்கை பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டியின் 6 ஆவது அத்தியாயம், அடுத்த ஆண்டு ஜூலை-ஓகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத் தொடர் முதலில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், 2026 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் T20 உலகக் கிண்ணப் போட்டிக்காக மைதானங்களைத் தயார் செய்வதற்காக இத்தொடரை ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, உலகக் கிண்ணப் போட்டி மற்றும் இலங்கையின் எதிர்கால சர்வதேசப் போட்டி அட்டவணைகளைக் கருத்தில் கொண்டு, LPL 06 ஆவது அத்தியாயம் அடுத்த ஆண்டு நடைபெறும் சரியான நாட்கள் தீர்மானிக்கப்படும்.
இந்த நிலையில், முன்னர் திட்டமிட்டபடி கொழும்பு, தம்புள்ளை, காலி, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய அணிகளின் பங்கேற்புடன் இப்போட்டி நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இத்தொடரின் உத்தியோகபூர்வ வர்த்தக தூதுவராக நியமிக்கப்பட்டிருந்த மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி ஆட்டக்காரரும் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பலரும் இத்தொடரில் பங்கேற்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










