மட்டக்களப்பு (F)பைன் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தினால், உதிரம் கொடுப்போம்-மனிதம் காப்போம் எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு 01-11-2025 அன்று எல்லை வீதி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தின் எதிரில் உள்ள சனசமூக மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலைக்கழகத்தின் ஸ்தாபகரும், தலைவருமான தேவ-அலோசியஸ் இன் தலைமையிலும், மட்டக்களப்பு லயன்ஸ் சுப்ரீம் கழகம், மற்றும் மட்டக்களப்பு லயன்ஸ் லேடி ஸ்டார் கழகம் ஆகியவற்றின் அனுசரணையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் 30 இற்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் தங்களது குருதியை நன்கொடையாக வழங்கியிருந்தனர்.
மட்டக்களப்பு வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பாக உள்ள வைத்தியர் கே.டிலுசா மற்றும் அவரது குழுவினரின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைக்கழகத்தின் உறுப்பினர்கள், லயன்ஸ் கழக அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு (F)பைன் ஆர்ட்ஸ் கலைக்கழகமானது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழும் இலங்கை புத்தசாசன, கலாசார அமைச்சின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கலை, கலாசாரம், கல்வி போன்ற சமூகச் செயற்பாடுகளை ஆண்டுதோறும் செய்து வருவதாகவும், அதன் தலைவர் இதன்போது தெரிவித்தார்.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇
![]()










