இந்தியாவும் இலங்கையும் மித்ரா சக்தி எனும் இராணுவப் பயிற்சியை இன்று (10.11.2025) ஆரம்பிக்கின்றன.
இப் பயிற்சிகள் இம் மாதம் 23 ஆம் திகதிவரை கர்நாடகாவின் பெலகாவி எனும் இடத்தில் நடத்தப்படவுள்ளதாக இந்திய பாதுகாப்பு இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த இராணுவ பயிற்சிகள் 11 ஆவது வருடமாக நடத்தப்படுகின்றன.
பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட்ட பல்வேறு நோக்கங்களின் அடிப்படையில் குறித்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னதாக இரண்டு நாட்டுப் படையினருக்கு இடையிலான 10 வது வருடப் பயிற்சிகள், இலங்கையின் மாதுருஓயாவில் நடத்தப்பட்டன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









