மூன்று கண்காணிப்பு செயற்கைக்கோள்களை, ஒரே நேரத்தில் விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், ஈரானில் தயாரிக்கப்பட்ட ‘பயா, ஜாபர், கோவ்சர்’ ஆகிய, மூன்று கண்காணிப்பு செயற்கைக்கோள்களை, அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஒரே நேரத்தில் விண்ணில் ஏவ திட்டமிட்டு உள்ளதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.
பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் விதித்த பல்வேறு தடைகள் இருந்த போதும், விண்வெளி திட்டத்தில் பெரிய முன்னேற்றங்களை ஈரான் கண்டுள்ளதாக ஈரானிய விண்வெளி அமைப்பின் தலைவர் ஹசன் சலாரி தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி குறித்த செயற்கைக்கோள்கள் விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, தொடர்பான தரவுகளை வழங்கும் எனவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










