2030 ஆம் ஆண்டளவில் தேயிலை ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க எதிர்பார்ப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2030 ஆம் ஆண்டளவில், 2.5 பில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. 

6 ஆவது ஆசிய தேயிலை கூட்டமைப்பு உச்சி மாநாடு மற்றும் ஆசியத் தேயிலை கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்றுக்கொண்டமை தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது. 

இதன் போதே சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி பொது முகாமையாளர் சமன் ரத்நாயக்க இத் தகவலை வெளியிட்டார். 

அத்துடன் நாட்டின் தேயிலை உற்பத்தியில் 75 சதவீத பங்களிப்பினை சிறு தேயிலைத் தோட்டங்களே வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை தலைமை வகிக்கும் 06 ஆவது ஆசிய தேயிலை கூட்டமைப்பு உச்சி மாநாடு இம் மாதம் 27 ஆம் திகதி கொழும்பில் முதன் முறையாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

6 நாடுகளைச் சேர்ந்த 25 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects