போதைப்பொருள் ஒழிப்புப் பணியிலிருந்து அரசாங்கம் திசை திருப்பப்படாது என்றும், எதிர்க்கட்சிகளின் முயற்சிகளால் அதைத் தடுக்க முடியாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட தென் மாகாண நிகழ்ச்சி 20.11.2025 அன்று தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,
அத்துடன் மிகவும் சவாலான இந்த வேலையைத் தொடருமாறு பாதுகாப்புப் படைகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் முழு ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
நாட்டின் போதைப்பொருள் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட இந்த “முழு நாடுமே ஒன்றாக” தேசிய முன்முயற்சி, ஜனாதிபதியின் அனுசரணையில் தங்காலை பொது மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
9 மாகாணங்களிலும் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள் பரவல் மற்றும் கடத்தலை ஒழிப்பதில் கவனம் செலுத்துகிறது.
இதில் குறிப்பாக நாட்டின் இளைஞர்களைப் பாதுகாப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் ஈடுபட்ட பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வும் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மகாசங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, சதருவன் மதரசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதிகள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










