முன் பிள்ளைப் பருவக் கல்வி முறைமையில் அறிமுகமாகும் கல்வி சீர்திருத்தம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தேசிய கல்வி நிறுவனத்தின் முன் பிள்ளைப் பருவ மேம்பாடு மற்றும் தொடக்கக் கல்வித் துறையால் தயாரிக்கப்பட்ட முன் பிள்ளைப் பருவ கல்வி பாடத்திட்டத்திற்கான தேசிய கொள்கை கட்டமைப்பின் வெளியீட்டு விழா 21.11.2025 அன்று கல்வி அமைச்சில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

முன் பிள்ளைப் பருவத்தினருக்கு தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல் புதிய முன் பிள்ளைப் பருவ கல்வி பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். 

மேலும், இப் புதிய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, அதற்கான ஆசிரியர் பயிற்சித் திட்டம் 2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், முன் பிள்ளைப் பருவத்திற்கான பாடத்திட்ட கட்டமைப்பைக் காண்பிக்கும் தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects