உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கபடி அணியினர்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சர்வதேச கபடி சம்மேளனம் சார்பில் நடைபெற்ற 11 அணிகளுக்கு இடையிலான 02 ஆவது மகளிர் கபடி உலகக் கிண்ண தொடரானது பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் 17.11.2025 அன்று ஆரம்பமாகியது.

இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்த நடப்பு சாம்பியன் இந்திய அணி (4 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், பங்களாதேஷ் (3 வெற்றி, ஒரு தோல்வி) 2- வது இடமும், ‘பி’ பிரிவில் சீன தைபே (5 ஆட்டங்களிலும் வெற்றி) முதலிடமும், ஈரான் (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன. 

அரையிறுதியில் ஈரானை வீழ்த்தி இந்தியாவும், பங்களாதேஷை வீழ்த்தி சீன தைபே அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. 

இந் நிலையில் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா – சீன தைபே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 35-28 என்ற புள்ளி கணக்கில் சீனை தைபே அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects