தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் கடுவலை அதிவேக நெடுஞ்சாலை பகுதியினூடான வாகனப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
வெள்ள நிலைமை காரணமாக கடவத்தையிலிருந்து அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் வாகனங்கள் கடுவலை வழியாக வெளியேறுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், கடுவலையிலிருந்து கடவத்தை நோக்கி, அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் வாகனங்களும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










