நாட்டில் நிலவிய பாதகமான வானிலையுடன் நடத்த இயலாத கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் ஏனைய பாடங்கள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்தார்.
ஊடக சந்திப்பொன்றை இன்று (02.12.2025) ஏற்பாடு செய்து குறித்த விடையத்தை தெரிவித்தார்.
மேலும் ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர்,
அத்துடன் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக மாகாண மற்றும் மாவட்ட அளவில் மதிப்பாய்வு செய்து போக்குவரத்து அமைப்பில் ஏற்படும் இடையூறுகள், தொடர்பாடல் சிக்கல்கள் மற்றும் மின் இழப்புகள் போன்ற பேரிடர்களுக்கு ஆளாகாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் இம் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.
இதே வேளை, ஏனைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது தொடர்பாக மாகாண மற்றும் மாவட்ட அளவில் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு எதிர்வரும் தினங்களில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றார்
மேலும், பேரிடரால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற்கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் இம் மாதம் 08 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.
ஏதேனும் நடைமுறை சிக்கல்களை எதிர்நோக்கும் நிறுவனங்கள் இருப்பின், உரிய நிறுவனத்தின் தலைவருக்கு மீண்டும் தொடங்கப்படும் திகதி குறித்த முடிவெடுக்கலாம் எனவும் அவர் கூறினார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










