தாதியர் மாணவர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு குறித்து வெளியான வர்த்தமானி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 – 2029 வரையிலான ஐந்து ஆண்டு காலப்பகுதியில் தாதியர் சேவைக்கு 13600 பேரை பணியமர்த்தும் இலக்கை பூர்த்தி செய்யும் வகையில் மேலும் 3000 மாணவர்களை தாதியர் பயிற்சிக்கு இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

2021, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அறிவியல் மற்றும் கணிதப் பாடப்பிரிவுகளின் கீழ் கா.போ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்காக தாதியர் பயிற்சிக்கான மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மே 29 முதல் ஜூன் 30 வரையிலான ஒரு மாத காலத்திற்கு சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.health.gov.lk அணுகி விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.

தகுதியான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்காணல்களின் பின்னர், தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான மாணவர் தாதியர் பயிற்சியை இவ்வருடத்தின் பிற்பகுதியில் ஆரம்பிப்பதற்குத் தேவையான திட்டங்களை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தயாரித்துள்ளது.


குறிப்பாக, 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், கல்வி உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடப்பிரிவுகளின் கீழ் சித்தியடைந்த 3000 மாணவர்கள் இதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.

நாட்டில் உள்ள சுகாதார சேவையின் தற்போதைய தரவுகளின்படி, 43,553 தாதியர்களைக் கொண்ட பணியாளர்கள் நாட்டின் அரச சுகாதார சேவையில் பணியாற்றி வருகின்றனர்.

தாதியர் துறையில் மனித வளப் பற்றாக்குறையைக் குறைக்கும் வகையில் 3,441 தரம் III தாதியர் குழுவொன்று நியமிக்கப்பட்டு 515 BSc Nursing பட்டதாரிகளுக்கு அண்மையில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

ஏறக்குறைய 7,800 மாணவர் தாதியர்கள், எதிர்காலத்தில் நாட்டின் சுகாதார சேவையில் இணைந்துகொள்ளும் நோக்கத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர் பாடசாலைகளில் ஏற்கனவே தமது தொழில்சார் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

2025 – 2029 ஐந்தாண்டுகளுக்கு 13,600 தாதியர்களை உள்வாங்குவது சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான திட்டமாகும், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனைக்கு அமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects