இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியின் புதிய சீருடை இன்று (03.11.2025) அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இன்று பிற்பகல் 1.30 ற்கு ஆரம்பமாகவுள்ள இந்தியா – தென்னாபிரிக்கா ஒருநாள் போட்டியின் போது இந்த சீருடை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு செம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கும் 10 ஆவது சர்வதேச கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரை, இந்த முறை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த தொடர், மார்ச் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










