மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஞாபக மறதி எனும் மோசமான நினைவுத்திறன் இழப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய கைகளில் ஸ்மார்ட்போனை வைத்திருப்பதால் எதனையும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. சாலையில் பயணிக்கும் போது எங்கு சென்று சேர வேண்டுமோ…! அதற்கான பாதையை கூகுள் எனும் செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொண்டு பயணிக்கிறார்கள். வேறு ஏதேனும் தகவல்கள் வேண்டும் என்றாலும்… இந்த கூகுள் எனும் செயலி மூலமாகவே தங்களுக்கான விடைகளை தெரிந்து கொள்கிறார்கள்.

இந்த தொழில்நுட்பம் ஓரளவு வரவேற்க கூடியது என்றாலும்.. மனிதர்களின் நினைவுத் திறனை மோசமாக பாதிக்கிறது. கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன் ஆண்களும், பெண்களும் சில எளிய பண பரிவர்த்தனை தொடர்பான கணக்குகளை மனதிலேயே கணக்கிட்டு மேற்கொண்டார்கள். ஆனால் தற்போது கியூ ஆர் கோட் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் எளிதாக மேற்கொள்வதால்… கணிதம் தொடர்பான சிந்திக்கும் திறனையும் மெதுவாக இழந்து வருகிறார்கள்.

இந்நிலையில் எதிர்காலத்தில் புவர் மெமரி அதாவது மோசமான நினைவு திறன் இழப்பு எனும் பாதிப்பிற்கு இளைய தலைமுறையினர் ஆளாக கூடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.

மேலும் இப்போது எம்மில் பலர், அவர்களுக்கு அறிமுகமான நபரை சந்திக்கும்போது, அவரது பெயர் சட்டென நினைவுக்கு வருவதில்லை. சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது… திடீரென்று நாம் இப்போது எங்கு சென்று கொண்டிருக்கிறோம்? என்ற குழப்பம் ஏற்படும். மாதாந்திர மின்கட்டணத்தை மின்வாரிய அலுவலகத்தில் செலுத்தி விட்டு, ரசீதை பெற்றுக் கொண்டோமா? இல்லையா? என்ற குழப்பம் ஏற்படும்.

இது போன்ற குழப்பங்கள் அடிக்கடி ஏற்பட்டால்… நீங்கள் புவர் மெமரி எனப்படும் நினைவு திறன் இழப்பு பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறீர்கள் என்றும், இவை அந்த பாதிப்பின் தொடக்க நிலை அறிகுறிகள் என்றும் வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

எம்முடைய மூளை பகுதியில் தகவல்களை சேமிப்பதிலும், அதனை மறுபரிசீலனை செய்து மீட்டெடுப்பதிலும் உள்ள இடையூறுகள் தான் புவர் மெமரி என வைத்தியர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். சில தருணங்களில் உங்களது வாகனத்தை இயக்கும் சாவி உங்களது பர்ஸில் வைத்துவிட்டு, வீடு முழுவதும் தேடிக் கொண்டிருப்பீர். இந்த அறிகுறி இதன் தொடக்க நிலை அறிகுறிகளில் ஒன்று என குறிப்பிடும் வைத்தியர்கள், இதற்காக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

வயது முதுமையின் காரணமாக இத்தகைய நிகழ்வுகள் பெரும்பான்மையானவர்களுக்கு இயல்பாக ஏற்படக்கூடும் என்றாலும், நாற்பது வயதிற்குள்ளாக இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால்.. அவர்களுக்கு நினைவுத்திறன் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரே வினாவை சிறிய இடைவெளி விட்டு மீண்டும் மீண்டும் கேட்பது, இப்படி செய்ய வேண்டும்- இந்தப் பக்கம் திரும்ப வேண்டும் -என வழிகாட்டினால், அதனை பின்பற்றுவதிலும், பின் தொடர்வதிலும் சிரமம் ஏற்படுவது, பிரபலமானவர்களின் பெயர்கள்- தோற்றங்கள் – பிரபலமான இடங்கள் – ஆகியவற்றை பற்றி கேட்கும் போது முரணாக பதிலளிப்பது, பயணத்தின் போது திசையை மறந்து தொடர்ந்து பயணிக்க முடியாமல் தடுமாறுவது, மிக முக்கியமான சந்திப்புகளில் பங்கு பற்றுவதை மறந்து விடுவது, உரையாடல் மேற்கொள்ளும் போது தடுமாறுவது… போன்ற அறிகுறிகள் – மோசமான நினைவுத்திறன் இழப்பின் தொடக்கநிலை பாதிப்பிற்குரிய அறிகுறிகளாகும்.

முதுமை, மூளையில் ஏற்படும் கட்டிகள், மன அழுத்தம், தலையில் உண்டான காயங்கள்… என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இவர்களுக்கு மருத்துவர்கள் சில பிரத்யேக பரிசோதனைகளையும், உளவியல் திறன் மதிப்பீடு சோதனைகளையும் , மூளை பகுதிக்கான எக்ஸ்ரே, எம் ஆர் ஐ சிடி ஸ்கேன் பரிசோதனைகளும் மேற்கொள்ள பரிந்துரைப்பர். முடிவுகளின் அடிப்படையில் அவர்களுக்கு நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் வழங்குவர். மேலும் இதன்போது குழு சிகிச்சை- ஒருங்கிணைந்த சிகிச்சை- விர்ச்சுவல் கேம் எனப்படும் மெய்நிகர் விளையாட்டு ரீதியிலான சிகிச்சை போன்றவற்றை மேற்கொண்டு இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.‌

வைத்தியர் விக்னேஷ்

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects