சேதமடைந்துள்ள மாவிலாறு அணைக்கட்டை முழுமையாக புனரமைக்க வடகீழ் பருவ பெயர்ச்சி மழை முடியும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
மகாவலி கங்கை மூலம் வந்து சேர்ந்த வெள்ள நீர் ஏற்படுத்திய தாக்கத்தினால், மாவிலாறு அணைக்கட்டு கடந்த மாதம் 30 ஆம் திகதி உடைப்பெடுத்தது.
மாவிலாறு அணைக்கட்டுப் பகுதிக்கு செல்லும் வீதி இப்போதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
வெள்ளம் வடிந்த பின்பே சேதமடைந்த அணைக்கட்டு பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்ய முடியும். அதன் பின்னரே முழுமையான சேதத்தை மதிப்பிடப்பட முடியும்.
இதே வேளை, சேருநுவர வெள்ளப் பாதுகாப்பு அணையின் நீலபொல மற்றும் தெஹிவத்த பகுதிகளில் ஏற்பட்ட சேதம், கந்தளாய் சூரியபுர வெள்ளப் பாதுகாப்பு அணை உடைந்ததால் ஏற்பட்ட சேதம் ஆகியவையும் மதிப்பீடு செய்யப்படும் என்றும் திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










