இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் சுஜீவ வீரசூரிய, 18.12.2025 ANTRU வெலிசரவில் உள்ள தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் இலங்கை தன்னார்வ கடற்படையின் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இதன்போது தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் கடற்படை மரபுகளுக்கேற்ப அவருக்கு, வரவேற்பளிக்கப்பட்டது.
தன்னார்வ கடற்படைத் தளபதியாகப் பணியாற்றிய ரியர் அட்மிரல் ஜகத் குமார, தன்னார்வ கடற்படைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை ஒப்படைத்தார்.
தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டதன் பின்னர், கடற்படை மரபுகளுக்கு இணங்க, ரியர் அட்மிரல் ஜகத் குமாரவுக்கு தன்னார்வ கடற்படை தலைமையகத்திலிருந்து பிரியாவிடை வழங்கப்பட்டது.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










