சர்வதேச ரீதியில் 1000 தரவரிசையில் உள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மருத்துவப் பட்டங்களை அங்கீகரிப்பதற்காக இலங்கை சட்டமியற்றும் பணியை ஆரம்பித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது .
முன்னதாக, மருத்துவக் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்தது.
தேவையான விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு சட்ட வரைவு ஆசிரியருக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேபாளம், பங்களாதேஷ் மற்றும் சீனா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து பெருமளவிலான இலங்கை மாணவர்கள் மருத்துவப் பட்டங்களைப் பெறுகின்றனர்.
சமீபத்தில், பங்களாதேஷ் தனது பல மருத்துவ பல்கலைக்கழகங்களை அங்கீகரிக்க கோரிக்கை விடுத்தது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇