3.5 சதவீதமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறையும்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.5 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது, நெருக்கடியின் விளைவுகள், வளர்ச்சிக்கான கட்டமைப்புத் தடைகள் மற்றும் அதிகரித்த உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளைப் பிரதிபலிப்பதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளிலும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மேலும் 3.1 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில் எதிர்பாராத விதமாக 6 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருந்தது.

எனினும், அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தகத் தடைகள், நிதிச்சந்தை ஏற்ற இறக்கம் ஆகியவற்றுக்கு மத்தியில் தெற்காசியாவில் செயல்பாடு குறைந்து வருவதே பொருளாதார வீழ்ச்சிக்கான காரணம் என உலக வங்கி குறிப்பிட்டிருந்தது.

முன்னதாக, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என்று கணிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், கடந்த ஜனவரி மாத கணிப்புகளுடன் ஒப்பிடும்போது, இந்த முன்னறிவிப்பு 0.4 சதவீத புள்ளிகளால் குறைந்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects