2026 ஆம் ஆண்டு வானில் நடக்கவுள்ள கண்கவர் வானியல் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஆம் ஆண்டு, வானில் ஒரு கண்கவர் வானியல் நிகழ்வு நடக்கவுள்ளது.

ஆண்டின் முதல் முழு நிலவு, ‘ஓநாய் நிலவு’ ஆகும்.

சூப்பர் மூன் என்பது சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும்போது ஏற்படும் முழு நிலவு ஆகும்.

நாசாவின் கூற்றுப்படி, அந்நாளில் சந்திரன் சாதாரண முழு நிலவை விட 14% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் தோன்றும் என தெரிவிக்கப்படுகிறது.

நிலவு பூமியைச் சுற்றி வரும் பாதை வட்ட வடிவில் இல்லாமல் நீள்வட்ட வடிவில் உள்ளது.

இதில் பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் நிலையை ‘பெரிஜி’ (Perigee) என்று அழைப்பர்.

இந்த கண்கவர் காட்சி, ஜனவரி 2 வெள்ளிக்கிழமை அல்லது ஜனவரி 4 ஞாயிற்றுக்கிழமை சூரியன் மறையும் நேரத்தில் கிழக்கு அடிவானத்தை நோக்கிப் பார்க்குமாறு வானியலாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் ஜனவரி 3, பிற்பகல் 3:32க்கு அதன் அதிகபட்ச பிரகாசத்தை அடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சூப்பர் மூனைக் காண சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை, மேலும் அது வெறும் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும்.
ஆண்டு இறுதிக்குள் மேலும் இரண்டு சூப்பர் நிலவுகள் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவை நவம்பர் 24, 2026 அன்று நிகழும் பீவர் சூப்பர்மூன் மற்றும் டிசம்பர் 24, 2026 அன்று நிகழும் கோல்ட் சூப்பர்மூன் ஆகும்.

இந்த இயற்கையின் அழகை அனைவரும் ஜனவரி 3 ஆம் திகதி இரவு பார்க்குமாறு வானியியலாளர்கள் கேட்டு கொள்கின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects