நாட்டில் மிகக் குறைந்தளவான வெப்பநிலை இன்று (06.01.2026) நுவரெலியாவில் பதிவாகியுள்ளது.
அதன்படி, 14.2 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் அதிகாலை நேரத்தில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்கள் தெரிவித்த தரவுகளின் அடிப்படையில் இது பதிவாகியுள்ளது.
மேலதிகமாக, 05.01.2026 அன்று அம்பாறையின் லாஹுகலவில் 173.5 மில்லி மீற்றர் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 05.01.2026 அன்று காலை 8:30 மணி முதல் இன்று (06.01.2026) காலை 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் கண்காணிப்பு நிலையங்களில் பதிவான மழைப்பொழிவின் அடிப்படையில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










