பாகிஸ்தான் – இலங்கை கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் 13 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, பாகிஸ்தான் பிரதமரின் கைத்தொழில் மற்றும் உற்பத்தித் துறைகளுக்கான விசேட உதவியாளர் ஹரூன் அக்தர் கான், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-654 என்ற விமானத்தின் ஊடாகக் கட்டுநாயக்க விமான நிலையத்தை 27.01.2026 அன்று வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இக் கூட்டத்தொடர் இலங்கையின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த விஜயத்தில் பாகிஸ்தான் பிரதமரின் விசேட உதவியாளர் ஹரூன் அக்தர் கானுடன் தூதுக்குழுவினராக அந்நாட்டின் மேலும் 05 உயர் அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










